மட்டக்களப்பு திருப்பழுகாமத்தைச் சேர்ந்தவரும் சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவருமாகிய இளந்திரையன் ஆறுமுகம் அவுஸ்திரேலியாவில் '' Q '' எனும் குறுந்திரைப்படம் ஒன்றினை இயக்கியுள்ளார்.
கடந்த காலங்களில் இந்திய சினிமாவில் பணியாற்றிய இவர் முதன் முறையாக வரலாற்றுக் கலைஞர்களை உள்ளடக்கிய இப்படத்தினை இயக்கியுள்ளார். உலக சினிமா அளவுகோல்களுக்கு ஏற்றால் போல் இத் திரைப்படத்தின் கதையினையும் அமைத்திருக்கின்றார்.
வேகமான விழி அசைவு ( றப்பிற் ஐ மூமன்ற் றிம் ) எனப்படும் உறக்க நிலையில் கவனிக்கப் படக்கூடிய பொய்யான நடக்காத கற்பனைகள் நடந்த உண்மைகள் மூளையின் ஒரு பகுதியான (Hippocampus) இல் சேமிக்கப்படுகையில் ஆழ்ந்த உறக்க நிலையில் நடக்காத கற்பனைகளில் உள்ள (ஈமோன்) ஆன சம்பவங்களுக்கு முதல்தரபடியாக கனவுகளில் வரிசைப்படுத்தப்பட்டு மெய்ப்படுவதை கருவாகக்கொண்டு இக் கதையினை எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தினுடைய (Trailor) பின் இணைப்பு காட்சிகள் வெளியாகியுள் ளதுடன், இதன் முழு திரைப்பட காட்சிகள் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது.
இப்படத்தின் Trailor இற்கு அவுஸ்திரேலியாவில் வெளியாகிய குறுந்திரைப்பட வரிசையில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளதுடன், 375 இற்கு மேற்பட்ட சர்வதேச குறுந்திரைப்பட விருது விழாக்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இப்படம் தொடர்பான மேலதிக விபரத்தினையும், படத்தின் Trailer இணையும் பார்வையிட வேண்டுமாயின் இணையத்தில்
02. https://www.facebook.com/vproductionsaustralia



.jpg)

Post a Comment