(கிருஷ்மன்)
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கப்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள 10 வீடுகள் மற்றும் 10மலசல கூடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒதுக்கீடு செய்த முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் து.நவரெட்ணராஜா கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வுகளில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.எம்.நாகிப், கிராம உத்தியோகத்தர்களின் நிருவாக உத்தியோகத்தர் கே.தர்மதாச, திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர் ரி.பரமானந்தம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர். ச.சமனந்தகுமார உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
அமைக்கப்படவுள்ள 10 வீடுகளுக்கும் தலா ஒரு இலட்சமும், மலசல கூடத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment