0
(பொன்முடி) சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயு சுவாமி ஆலயத்தில் இன்று (29) மாலை சூரன் போர் விழாவானது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் மத்தியில் நடைபெற்றது. 

மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து மக்கள் வந்திருந்தனர். பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் ஆறுமுகப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்றதைத் தெடர்ந்து சூரபத்மன் ஆலயத்திலிருந்து வெளிவீதி வந்ததும் ஆறுமுகன் முருகப்பெருமானுக்கும் சூரனுக்கும் இடையில் போர் நடைபெற்றது. 

சித்தாண்டி முருகன் ஆலயமென்றாலே பல்லாண்டு காலமாக சூரன்போர் அனைவரையும் கவர்ந்து வருகின்ற ஒரு விழாவாக நடைபெறுவது வழமைஇ அந்தவகையில் சரியாக சுபவேளையில் சரியாக இன்று மாலை 5.00 மணியளவில் சூரபத்மன் முரகனிடத்திலுள்ள வேல் கொண்டு சங்காரம் செய்யப்படுகின்றான் அதனைத்தொடர்ந்து கந்தசஷ்டி விரதம் அனுஸ்டித்த பக்தர்கள் தலையில் தண்ணீர் தெளித்து தேங்காய் உடைத்து முருகனை வழிபாடுவதையும் படங்களில் காணலாம். 




















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top