(எஸ்.பி.நாதன்)
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிசேகரிக்கும் முயற்சியில் 1400 கி.மீ துவிச்சக்கரவண்டி பவனியை மேற்கொண்ட இரு வீரர்கள் இன்று வெள்ளிக்கிழமை (24) மட்டக்களப்பு பஸ் நிலையத்தை வந்தடைந்தனர்
கொழும்பைச் சேர்ந்த தனுஸ்கா பெரேரா மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்த யூஜின் செல்வின் இருவரும் இந்த மனிதாபிமான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
கடந்த ஓக்டோபர் மாதம் 17 ஆம் திகதி கொழும்பிலிருந்து 15 நாட்களை இலக்கு வைத்து ஆரம்பமான பவனி புத்தளம், அனுராதபுரம், மன்னார், பூனகரி, யாழ்ப்பாணம், பருத்தித்துறை. ஆனையிறவு, பரந்தன், முல்லைத்தீவு, புல்மோட்டை, நிலாவெளி, திருகோணமலை ஊடாக நேற்று மாலை கல்குடாவை வந்தடைந்தனர்.
எட்டாவது நாளான இன்று (24) 850 கி; மீ. கடந்த நிலையில் காலை கல்குடாவிலிருந்து ஆரம்பித்து மட்டக்களப்பை வந்தடைந்தனர் பின்பு இங்கிருந்து அக்கரைப்பற்று, பொத்துவில், கதிர்காமம், மாத்தறை மற்றும் காலி ஊடாக கொழும்பைச் சென்றடைவதாகத் தெரிவித்தனர்.
கொழும்பு றோட்டறிக் கழகத்தின் அனுசரணையில் கடந்த 5 வருடங்களாக கொழும்பிலிருந்து 5 மைல் மரதன் ஓட்டத்தில் பங்கு கொண்டு இவ்வருடம் சயிக்கிளோட்ட பவனியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
12 நாட்களில் இப்பவனி நிறைவுபெறும் என்றும் நன்கொடையாளர்கள் பேஸ்புக் மற்றும் ருவீட்டர் மற்றும் இணையத்தளம் வளியாக தொடர்பு கொண்டு கணக்கிலக்கத்தைப் பெற்று வங்கிகளுக்கு பணத்தை செலுத்த முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment