0

( ஆர்.சிவா)

அதி மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் மகிந்த சிந்தனைக்கு அமைவாக நடை முறைப்படுத்தப்பட்டுவரும் கல்வி அபிவிருத்தி திட்டங்களில் பாடசாலைகளுக்கான மகிந்த உதய ஆய்வு கூடம் அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

இதற்கமைவாக திருகோணமலை மாவட்டத்தில்  நடைமுறைப்படுத்தப்பட்டு நிறைவுற்ற மகிந்த உதய ஆய்வு கூடங்கள்  இன்று   திறந்து  வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் தி/தி/அபயபுர மகா வித்தியாலயம், தி/தி/விபுலானந்தா கல்லூரி, தி/கந்/அல்-தாரிஹ் மகா வித்தியாலயம், தி/கந்/கந்தளாய் மகா வித்தியாலயம், தி/கந்/முள்ளிபொத்தானை சிங்கள மகா வித்தியாலயம்,   தி/கிண்/கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி, தி/கிண்/அல்-ஹிஜ்ரா மகா வித்தியாலயம், தி/திவ/மஹதியள்வௌ மகா வித்தியாலயம் மற்றும் தி/திவ/பதவி பழுகாகவங்குவ மகா வித்தியாலயம் ஆகிய  பாடசாலைகளில் ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top