0

(எஸ்.பி..நாதன்)

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் கொய்க்;கா நிறுவனத்தின் நிதிஒதுக்கீட்டின் கீழ் ரூபாய் 4 மில்லியன் செலவில் புனர்நிர்மாணம்; செய்யப்பட்ட புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வுகூடம் இன்று (14) திறந்து வைக்கப்பட்டது.
தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே. ஏ. ரஞ்சித், கொய்க்கா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சோஹூசன், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் எஸ் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்

தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழில் தேடலில் மாணவர்கள் முகம்கொடுக்கும் சவாலை எதிர்கொள்வதற்காக மாணவர்களிடையே தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறனை வளர்க்கும் நோக்கில் இவ் ஆய்வு திறக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜே. ஏ. ரஞ்சித் தெரிவித்தார்.


தொழில் பயிற்சி நிலையங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.













Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top