0
(ஜனகன்)

சுகாதார வைத்தியாதிகாரி வைத்தியர்  ரவிச்சந்திரன் மற்றும் பிராந்திய மலேரியா வைத்திய அதிகாரி திருமதி மேகலா ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக செங்கலடி மலேரியா தடுப்புப்பிரிவின் ஏற்பாட்டில் பெண்களின் சுகாதார தற்காப்பு முறையும் மலேரியா இரத்த பரிசோதனையும் அண்மையில் இடம்பெற்றது.

இலங்கையில் நலிவுற்ற பெண்களை வலுவூட்டும் திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் சேப்த சில்ரன், வை.எம்.சீ.ஏ  ஊடாக இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 

இதில் திட்ட கிராமமான செங்கலடி 2 கிராமத்தில் மாதர் சங்கம் இணைந்து இச் செயற்பாட்டினை ஒழுங்கு செய்தனர். இதனுடன் சுகாதார தினணக்களம் இணைந்து செங்கலடி 02 கிராமத்தில் மலேரியா தடுப்பு முகாம் மற்றும் இரத்த பரிசோதனை நிகழ்வுவும் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் செங்கலடி 02 EDO, , வை.எம்.சீ.ஏ    கள உத்தியோகஸ்தர்கள், வை.எம்.சீ.ஏ சமூக அணி திரட்டுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top