(சச்சு & எரிக்)
திவிநெகும வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்டமாக பாடசாலைகளுக்கு பத்து வகையான பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பட்டு அவற்றினை பாடசாலை தோட்டத்தில் உற்பத்தி செய்து உற்பத்தியினை ஊக்குவிக்குமுகமாகவும், கூட்டுப் பசளை தயாரிப்பு மூலம் உற்பத்தி மேற்கொள்ளும் முறைமையினை விருத்தி செய்யும் நோக்கமாகக் கொண்டும் தேசிய ரீதியாக பயிர் நடுகை நிகழ்வு இன்று நாடுபூராகவும் நடைபெற்றது.
அதன் அடிப்படையில் இன்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட இந்துக் கல்லூரியில் இன்று (20) திங்கட்கிழமை அதிபர்.கே அருட்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்ததுடன், இத் திட்டம் தொடர்பாக விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் கருத்துரைகளையும் வழங்கிவைத்தர்.
Post a Comment