பதுளை மாவட்ட, மீறியாபெத்த, கொஸ்லந்த பிரதேசத்தில் இன்று காலை 7.15 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினைத் தொடர்ந்து அங்கு பாரிய அனர்த்த நிலை ஏற்பட்டிருந்தது.
அப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி சீரற்ற காலநிலை காரணமாக இன்று மாலை 6.30 மணியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அப்பிரதேசத்தில் பெய்து வரும் அடை மழையும், இதனால் ஏற்பட்டுள்ள மண் சரிவு அபாயமும் மீட்புப் பணியை நிறுத்துவதற்குக் காரணம் என குறிப்பிடப்படுகின்றது.
மீண்டும் நாளைக் காலை மீட்புப் பணிகள் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக மீட்பு பணிகளில் ஈடுபட்ட இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு Battifm.com இணையத்தள குழுமத்தின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வாறாக பாதிக்கப்பட்ட உறவுகளிற்கு எமது இணையத்தளம் சார்பாக எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாம் தயாராக உள்ளோம் என்பதனையும் தெரிவித்துக்கொண்டு, இதன் போது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் இறைவனை பிராத்திக்கிறோம்.
Post a Comment