0
(சச்சு)

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நாடளாவிய ரீதியில் நடாத்தியிருந்த இந்து சமய பொது அறிவுப்போட்டிப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு  பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

எழுபதுநாயிரம் மாணவர்கள் பங்குபற்றிய  இப்போட்டியில் தேசிய மட்டப் பிரிவுகளில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு முறையே ஐயாயிரம் ரூபாய் , மூவாயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய்யென பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

இப்போட்டிப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட மாணவர்களுள் 32 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் 07 பேர் தேசிய மட்டத்திற்கு தெரிவாகினார்கள்.

பிரதமர்  டி.எம்.ஜயரரெட்ன  பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் ,   மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்களையும்  வழங்கிவைத்தார். 

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார நிலைய மாணவிகளின் கலைநிகழ்வுகளும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.    














Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top