0

(எஸ்.பி.நாதன்)

மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் உள்ள களுவாஞ்சிக்குடியில் இன்று  (28)  முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுபாயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடிப் பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடியிலிருந்து தம்பிலுவில் நோக்கி உறவினர்களுடன் சென்று கொண்டிருந்த ஓட்டோ வேகக் கட்டப்பாட்டை இழந்து வீதியின் அருகில் உள்ள மின்சாரக் கம்பத்துடன் மோதியதில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

தம்பிலுவிலைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான எஸ். ரவிராஜ் வயது (45) ஆபத்தான நிலையில் உள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரது உறவினர்களான தம்பிலுவிலைச் சேர்ந்த பி. யசோதரன் வயது ( 15), எம். மகேஸ்வரி வயது ( 60) மற்றும் எஸ்.திலகவதி வயது ( 65) என்பவர்களே படுகாயமடைந்து சிகிட்சை பெற்று வருகின்றனர்.

களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top