(எஸ்.பி.நாதன்)
உலக உளநல விழிப்பணர்வு ஊர்வலமும் வீதி நாடகமும் மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.
மட்டக்களப்பு வலய கல்வித் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஊர்வலம் மட்டக்களப்பு புளியடிக்குடா செபஸ்தியான் தேவாலயத்தில் ஆரம்பமாகி பார்வீதி, திருமலை வீதி , மணிக்கூட்டுக் கோபுரம் சுங்க வீதி வழியாக மெதடிஸ்த கல்லூரியைச் சென்றது.
கல்லடி சிவானந்தா வித்தியாலயம், மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம், பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயம், கல்லடி விவேகானந்தா வித்தியாலய மாணவர்களால் ஜீ.வி வைத்தியசாலைச் சந்தி, மட்டக்களப்பு பொலிஸ் சுற்றுவட்டம் மற்றும் காந்திப் பூங்கா என்பவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகங்கள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ. தவராஜா மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். குருகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வோரு வருடமும் ஓக்டோபர் 10 ஆம் திகதி உலக உளநல தினம்
அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment