0

(எஸ்.பி.நாதன்)

மட்டக்களப்பு ராகுல் நாயுடு எழுதிய சமயம் கடந்த உண்மையை இயம்பும் 'உலகெலாம்' நூல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (26) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெறும்.

செங்கதிர் இலக்கிய வட்டத் தலைவர் க. தங்கேஸ்வரி தலைமையில் நடைபெறும் நிகழ்வில் ஆசியுரைகளை இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய குருமார் நிகழ்த்துவர்.

வரவேற்புரையை சி. ரஜீவ்காந்த் நிகழ்துவதோடு, விஷ்வ பரத கலாலயா மாணவிகளினால் வரவேற்பு நடனம் இடம்பெறும்.
முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி;எஸ்.எம். சாள்ஸ் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி;. துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண கலாசார திணைக்களப் பணிப்பாளர் டபிள்யு. ஏ.எல். விக்கிரம ஆராய்ச்சி, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி த. சிவநாதன் ஆகியோரும் கலந்து கொள்வர்.

முதல் பிரதி பெறும் விசேட விருந்தினராக ஜனாதிபதியின் இணைப்பாளரும், மட்டக்களப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளருமான அருண் தம்பிமுத்து கலந்து கொண்டு முதல் பிரதியைப் பெற்று நூலை வெளியிட்டு வைப்பார்.

நூல் நயவுரையை கிழக்கு பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் றூபி வலன்ரினா பிரான்சிஸ் நிகழ்த்தவுள்ளார்.

குழு நடனம், நூலாசிரியர் கௌரவிப்பு, பாவடிவில் பாட்டு என்பன அரங்கேறும்.

விசேட நிகழ்வாக www.battifm.com   இணைய வானொலி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top