0

(கிருஷ்மன் )

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கோளாவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 விதவைகளின் குடும்ப வாழ்வாதாரத்திற்காக 4000 ரூபா பெறுமதியான பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
அக்கரைப்பற்று கோளாவில் செய்திறன் வாழ்வாதார அமைப்பினர் முன்னெடுத்த இவ்வேலைத்திட்டத்திற்கு சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் ஆலயத்தினால் நடாத்தப்பட்ட வரும் அன்பே சிவம் அமைப்பு நிதியீட்டத்தை வழங்கியது.

செய்திறன் வாழ்வாதார அமைப்பின் தலைவர் தா.ஜெயாகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன்  அன்பே சிவம் அமைப்பின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் எஸ்.கார்த்திக் கிராம உத்தியோகத்தர்களின் நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாசஇ திவிநெகும பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா கிராம உத்தியோகத்தர்  பொ.முரளீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தனர்.

வழங்கப்பட்ட பொதியினுள் 1000ரூபா பெறுமதியான பயிர்வகை விதைகளும் 3000ரூபா பெறுமதியான ஆடைகளும் உள்ளடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top