(மன்மதன்)
இலங்கை பெண்கள் சாரணியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கான இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் 27-1O-2014 திங்கட்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூட அரங்கில் கண் வைத்திய நிபுணர் பி.டயஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளிலிருந்து வருகைதந்த 40 மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கான பூரண அனுசரனையினையும் நிதி ஒதுக்கீட்டினையும் வேல்ஜீயம் நாட்டில் வசித்துவருகின்ற இலங்கையச் சேர்ந்த திருமதி சாமினி ஜேக்கப்பினால் வழங்கப்பட்டதுடன், அவரது கைகளினால் மாணவர்களுக்கு அவற்றினை வழங்கிவைத்தார்.
சுகாதார திணைக்களத்தின் வைத்தியர் நவலோஜிதன், இலங்கை பெண்கள் சாரணியர் சங்கத்தின் தலைவர் நிமாலி விஜெயகோன் , இலங்கை பெண்கள் சாரணியர் சங்கத்தின் வட , கிழக்கு மாகாண பணிப்பாளர் டிலானி மோகன்ராஜ் உள்ளிட்ட பெண்கள் சாரணியர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment