(எஸ்.பி.நாதன்)
மீன்பாடும் மெல்லிசை கானங்கள்' இறுவெட்டு வெளியீட்டு விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்றது.
மட்டக்களப்பின் பாரம்பரியங்கள், இயற்கை அழகுடன் கூடிய இடங்களின் பெருமைகள், கலை கலாசார விழுமியங்களை பாடல் வரிகளாக எழுதப்பட்டு ஜீவம் சகோதரர்களிலாலும் அவர்களது வழித்தேன்றல்களினாலும் பாடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பின் மெல்லிசை முன்னோடிகளால் இயற்றி இசையமைக்கப்பட்ட இவ் இறுவெட்டை மண்முனை வடக்கு கலாசாரப் பேரவை அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான வெ. தவராஜாவின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாண்புகளை மாநிலத்தில் மலர வைத்த ஜீவன் சகோதரர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றலில் உருவான கலைஞர்களுக்கு கௌரவமளிக்கப்பட்டமையை அனைவரும் அகலக் கண்வைத்துப் பார்த்திருந்தனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் மரபு வழியாக பேணப்பட்டு வரும் மட்டக்களப்பிற்கே தனித்துவமான மீன் மகளின் உருவைக் கொண்டு; விருதுகளை வடிவமைத்திருக்கும் செயலகத்தின் முயற்சி பாராட்டுதற்குரியது.

கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா, கருணாகரன் ஜனா, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், பேராசிரியர் எஸ். மௌனகுரு, மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment