0
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமிய வீதிகள் பாலங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கிறவல் வீதிகளாகக் காணப்படும் வீதிகளுக்கு கொங்கிறீட் இடும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக நான்கு வீதிகளுக்கு அடிக்கல் நடும் வைபவங்கள் நேற்று (30) மாலை இடம்பெற்றன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பிரதேச செயலாளரோடு இணைந்து ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள அக்கரைப்பற்று – 7/1 சிதம்பரப்பிள்ளை வீதியின் முதலாம் குறுக்குத் தெரு, வாச்சிக்குடா பெரிய தம்பிரான் கோவில் குறுக்கு வீதி, அக்கரைப்பற்று – 7/4 பரமானந்தம் வீதி, அக்கரைப்பற்று – 8/2 ஆசைத்தம்பி வீதி ஆகியவற்றுக்குக் கொங்கிறீட் இடுவதற்கான அடிக்கற்களை நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வுகளில் குறித்த கிராமங்களுக்கான கிராம உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.






















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top