0

மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா அவர்களின் வாழ்த்துச் செய்தி.

இருளை அகற்றி ஒளியை பிரகாசிக்க வைக்கும் இனிய தீபாவளித் திருநாளில் இனங்களிடையே பரஸ்பர நல்லுறவும், நல்லிணக்கமும் மற்றும் நல்ல புரிந்துணர்வும் வளர இறைவன் அருள் புரியட்டும்.
எல்லா மதங்களும் அறத்தைப் போதிக்கின்றன. எல்லா நதிகளும் இறுதியில் கடலை சென்றடைவது போல் எல்ல மதங்களும் மனிதர்களிடத்தில் அன்பை போதிக்கின்றன.

அதர்மம் அழிந்து தர்மம் மேலோங்குவது போல் மனுக்குலத்தை இம்சித்து வந்த நரகாசுரனை அழித்து தர்மம் தழைத்தோங்கிய தினத்தை நினைவு கூர்ந்து இந்துக்கள் இன்று புதன்கிழமை (22) தீபத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

இருளில் ஒளியேற்றும் போது அதன் பிரகாசம் எம்மிடத்தில் புத்துணர்ச்சி ஏற்படுத்துவது போல் மனிதர்களிடத்தில் குடிகொண்டுள்ள தீய எண்ணங்கள் அகன்று நல் எண்ணங்கள் இப்புனித நன்நாளில் பிறக்கட்டும்.

எல்லாத் தீமைகளும் உருவாகும் ஊற்று தீய மனமாகும். தீமைகளைத் தோற்றுவிக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் இத்திருநாளில் அகன்று நல்லெண்ணங்களை உருவாகும் நல்மனங்கள் உருவாக வேண்டுமென்று இந்து சகோதரர்களுக்கு ஆசிகூறி நிற்கின்றேன்.



Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top