0
(சண்)

கல்லாக இருந்த எங்களை சிலையாக வடித்து உருக்கொடுத்து உயர்த்திய எம் ஆசான்களை சிகரமாக போற்ற நாம் தயார் எனும்  தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு பாடசாலையின் அதிபர் கே.மனோராஜ் தலைமையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொறுப்பாளர் ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தா மகராஹ் அருளாளராக கலந்து அருளுரை வழங்கி ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.மாணிக்கராஜா கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் கலந்து சிறப்பித்தார்.

பழைய மாணவர் சங்க தலைவரும், பிரதேச செயலாளருமாகிய வி.தவராசா தலைமையில் அதிதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மலர் மாலை அணிவித்து இராமகிருஷ்ண மிஷன் வளாகத்திலிருந்து பாண்ட் வாத்திய இசை முழங்க அழைத்துவரப்பட்டு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது கல்லென கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக மாணவர்களினால் மலர் மாலை அணிவித்து அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

மாணவர்களினாலும் , ஆசிரியர்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்ட கலை நிகழ்வுகள் அனைவரதும் கண்களுக்கு விருந்தளித்தது.























Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top