0

(எஸ்.பி.நாதன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு உட்பட சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொள்ளும் அனைத்து சுகாதார நடவடிக்ககைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தாபன விதிக்கோவைக்கு அமைவில்லாமல் சட்டரீதியற்ற முறையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் மாற்றத்தைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று திங்கட்கிழமை (20) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பில் பணிபுரிந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரான கே. ஜெய்சங்கர் என்பவர் கல்முனை பிராந்தியத்திற்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து ஏனைய பரிசோதகர்கள் அலுவலகத்திற்கு சமூகமளித்து வேலைகளில் ஈடுபடாமல் அலுவலகத்தில் இருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 72 சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட கிழக்கு மாகாணத்திலுள்ள 272 சுகாதாரப் பரிசோதகர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top