0
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டு மாநகர சபையினால் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் மாணவர்களுக்காகவும், வாசகர் வட்டங்களுக்காகவும் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்வரும் 31.10.2014 தொடக்கம் 02.11.2014 வரையான மூன்று தினங்களிலும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 8.00 மணிவரை மட்டு மாநகர, நகர மண்டபத்தில் மாபெரும் புத்தக கண்காட்சியும் , மலிவு விற்பனையும் இடம்பெறவுள்ளது.

மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் பல்வேறுபட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. கொழும்பிலிருந்து பிரபல புத்தக நிலையங்களின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், விற்பனை செய்ய்ப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது அனைவரும் வருகைதந்து பார்வையிடலாம், கொள்வனவு செய்யலாம் என்பதுடன் எந்தவிதமான நுழைவு கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என்பதனையும் அறியத்தருகின்றனர்.




Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top