0
(த.லோகதக்சன்)

பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹஸ்துமுல்ல, மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலியை தெரிவிப்பதுடன், அவர்களது உறவுகளுக்கும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தினை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அம்மக்களுக்கு அவசரமாக உதவும் முகமாக இயன்ற ஆதரவுகளை பணமாகவோ அல்லது பொருளாகவோ மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எமது உறவுகள் பாதிக்கப்படும் போது விரைந்து உதவிக் கரம் நீட்டுவது எம் அனைவரினதும் கடமையாகும். ஆகவே எம்நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் வசிக்கும் எமது தமிழ் உறவுகள், அவர் அமைப்புக்கள், இந்து ஆலயங்கள் இம்மக்களுக்கு அவசரமாக தேவைப்படும் உதவியை வழங்கும் முகமாக உதவி நல்க முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர கேட்டுக் கொள்கின்றனர்;.

இதுதொடர்பாக அவசர தொடர்பினை மேற்கொள்வதற்கு 00094776034559> 0094652228273> 0094652228018> 0094653656608 மற்றும் yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com   என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களுடைய உதவிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

வங்கி தொடர்புகளுக்கு மட்டக்களப்பு கொமர்ஷியல் வங்கி, வங்கி இலக்கம் 1105040264> SWIFT CODE : CCEYLKLX, BANK CODE : 7056-105

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top