(கஜன்)
தாதன் வருகையும் தீப்பள்ளையமும் நூல் வெளியீட்டு விழா நிகழ்வானது கடந்த (07) செவ்வாய்க்கிழமை கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி கபாலிசானந்தா ஜீ அருளாலராக கலந்து ஆசீர் வழங்கிய இந்நிகழ்விற்கு பிரத விருந்தினராக அம்பாறை மாவட்ட செயலக மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் கலந்து சிறப்பித்ததுடன், நூலின் முதற்பிரதியினையும் பெற்றுக்கொண்டார்.
நூலாசிரியர் வை.கணேஷ் அவர்களினால் உருவாக்கி வெளியிடப்பட்ட இந்நிகழ்வில் விசேட அதிதியாக பேராசிரியர் மௌனகுரு கலந்துகொண்டார். மேலும் மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயங்களின் தலைவர் என்.ராஜேந்திரன் மற்றும் கலைஞர்கள் பொதுமக்கலென பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.


.jpg)








Post a Comment