0
(கஜன்)

கிழக்கிலங்கையில் பழம்பெருமை வாய்ந்த ஆலயங்களின் ஒன்றாகிய கல்முனை பாட்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவானது கடந்த 23.09.2014 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, நேற்றைய தினம் (08) புதன்கிழமை வனவாசகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நேற்றைய திருவிழாவின் 16 ஆம் நாள் நிகழ்வாகிய வனவாசகமானது துரியோதனனிடம் சூதில் தோற்றுப்போன பஞ்ச பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசகமும் , ஓரு வருடம் அஞ்ஞாதா வாசமும் (மறைந்திருந்து வாழ்வது) மேற்கொள்வதனையும்  பிரதிபலித்து நிற்கின்றது. இதன் போது இடம்பெறும் வாள்மாற்றுதல் நிகழ்வானது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக திகழ்கின்றது.

திருவிழாவின் நிறைவானது நாளை (10) ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீமிதிப்பு நிகழ்வுடன் நிறைவடைந்து, மறுநாள் (11) ஆம் திகதி தீக்குளிக்கு பால் ஊற்றும் பால் பள்ளயத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top