இவ்வாண்டுக்கான முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் சர்வதேச சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் “அன்பு செலுத்தி எம்மைப் பாதுகாக்கவும்” என்ற தொனிப்பொருளில் ஆலையடிவேம்பு பிரதேச பாலர் பாடாசாலைச் சிறார்களது சிறுவர் தின நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 13-10-2014, திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் நடைபெறவுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் யோகராசா உஜெயந்தன் அவர்களால், பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையிலும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜாவின் வழிப்படுத்தலிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுக்கு, ஆலையடிவேம்பு பிரதேச அனைத்துப் பாலர் பாடசாலை சிறார்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியைகள் அனைவரும் இவ்வண்ணம் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
- சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு, பிரதேச செயலகம், ஆலையடிவேம்பு.


Post a Comment