மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்திற்கும் மட்/கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்குமிடையில் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்றுவரும் சிநேக பூர்வ (Battle of Princes) கிறிக்கட் போட்டியானது நேற்றைய தினம் (08) புதன்கிழமை கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் திருமதி ரீ.அருட்ஜோதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாகவும், உதவி கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) வீ.லவகுமார் கௌரவ அதிதியாகவும், சிறப்பு அதிதியாக லயன்ஸ் கழக தலைவர் லயன் மகேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் , வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கிண்ணங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்கள்.






Post a Comment