0
(எஸ்ஸிந்தூ) 

தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய கட்டுமான பணிகள் போதுமான நிதி,பொருள் வசதிகள் இல்லாமல் மந்த கதியில் இடம் பெற்று வருகின்றது. ஆலய கட்டுமான பணியை தூரிதப்படுத்தி விரைவில் ஆலய கும்பாபிஷேகம் நடாத்தி முடிக்க நமது இணையத்தள வாசகர் ஆகிய உங்களிடம் உதவி வேண்டி நிற்கின்றதர்கள். உங்களால் முடிந்த பணம், சுவாமி சிலைகள், தரை ஓடுகள், வர்ணபூச்சுக்கள் மற்றும் ஆலயத்திற்கு கட்டுமான பணிக்கு தேவையான உதவி பொருட்கள் நீங்கள் வழங்கி வைக்கலாம்.


முகவரி:

கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயம் 
தேற்றாத்தீவு
மட்டக்களப்பு

ஆலய பதிவு இல:-HA/05/BT/212 

கட்டுமானப்பணிக்கான வங்கிக் கணக்கிலக்கம் :- 687797 
வங்கி:- இலங்கை வங்கி களுவாஞ்சிகுடி
S.VELUPPILLAI T.KANADAPPAN 
தொடர்பு இல:-0770348559 (த.விமாந்தராஜா)



21ம் நூற்றாண்டின் இந்துக் கட்டிடக் கலை வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு   தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயம்.

'ஓர்நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி  தெள்ளேணம்  கொட்டாமோ'

நீக்கமற எங்கும் நிறைந்து விளங்கும் ஏகபரம் பொருளான இறைவனுக்கு பற்பல நாமங்களும் பற்பல வடிவங்களும் தருகின்றது இந்து தர்மம்.அடியார்களின் பக்தித்திறத்துக்கு கேற்ப பல்வேறு வடிவங்களில் அருள்பாலிக்கின்ற இறைவடிவங்களில் பட்டிதொட்டிகள்வீதி ஓரங்கள்ஆற்றங்கரைகுளக்கரை என எங்ஙணுகும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வடிவம்தான் விநாயகர் பெருமானின் திருவடிவம்.
                        
அந்தவகையில் சிவபூமியாம் இலங்காபுரியின் கண்ணே அஞ்ஞான இருள்போக்கி மெய்ஞான ஒளி கொடுக்கும் ஆதவனின் வரவுகாணும் கிழக்கிலங்கையின் மீன்பாடும் வாவிமகள் நீண்டிலங்கும் புகழ்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே 'தேன்கதலி சூழ்ந்து விளங்க', கல்வியும் கலைகளும் சிறந்து ஓங்கும்  சிவபதிதான் 'தேனூர்'எனும் தேற்றாத்தீவுக் கிராமம்.இக்கிராமத்தில் குடிப்பரம்பல் தோன்றிய காலந்தொட்டே தமிழர்களின் பாரம்பரிய கலையான கொம்புமுறி விளையாட்டு இக்கிராமத்தின் மத்தியிலே ஆடப்பட்டு வந்ததையும், இவ்விளையாட்டை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகருக்கு ஆலயம் அமைத்துவழிபாடு இயற்றப்பட்டதாகவும் அறிலாம்இதனால் இவ் விநாயகர் கொம்புச்சந்திப் பிள்ளையார் எனவும் பொற்றப்படுகின்றார்.

ஆரம்ப காலத்தில் நீற்றுக் கட்டடித்தில் இருந்த இவ்வாலம் கடந்த 2007ம் ஆண்டு தை மாதம் பாலஸ்தானம் செய்யப்பட்டு நீற்றுச்சுவர் ஆலயம்  முற்றாக அகற்றப்பட்டு ஆகம முறைக்குட்பட்டதாகவும் இந்து கலை அம்சங்கள் நிறைந்ததாகவும் அமைக்கப்பட்டு நிர்மான வேலைகள் நிறைவுறும் நிலையில் உள்ளது.

புதிய இவ்வாலய கட்டுமானப்பணியினை நோக்கும் போது இந்துக்கட்டிடக்  கலைப்பாணிகளான நாகர,வேசர,தராவிட கட்டிடக் கலைப்பாணிகள் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாகத் திகழ்கின்றது என்றால் மிகையாகாது.

இவ்வாலயத்தில் கற்பக்கிரகம்அர்த்த மண்டபம்மகாமண்டபம்நிருத்த மண்டபம்தம்ப மண்டபம் ஆகியவற்றோடு வசந்த மண்டபம்யாகசாலை என ஆகமம்கூறும் அளவுப் பிரமாணங்களுக் கேற்ப மண்டப அமைப்புக்கள் விளங்குகின்றனஇதன் விமானமனது மூன்று தளங்களைக் கொண்டதாக அழகிய  சிற்பவேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றதுஇவ்வாலயத் தூண்கள் வட்டவடிவசதுரவடிவஎண்கோணவடிவமகக் காணப்படுவதோடு பல்வேறுபுடைப்புச்சிற்பங்களைக் கொண்டதாகவும் விளங்குகின்றதுஇதில் விநாயகப்பெருமானின் 32 வடிவங்களும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

இவ்வாலயத்தின் மண்டபங்கள்சுற்றுமண்டபங்கள் என்பவற்றின் உட்புறக் கூரையானது (பிளேட்)12 இராசிகள் வடிவங்கள்கமலம்ரிசபகுங்சரம் ,குதிரைஅன்னம்நாகம் போன்ற பல்வேறுபட்ட புடைப்புச் சிற்பங்களால் பொலிவுறுகின்றதுஆலயத்தின் மகாமண்டபத்தில் தேவசபையும்நிருத்த மண்டபத்தில்சிவன் பார்வதி ஆகிய தெய்வங்களுக்கான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய ஆலயங்களும் அமைகக்கப்பபடுள்ளதோடு சமய குரவர் நால்வரது வடிவங்களும் அவர்களது வயதுத்தோற்றத்துக்கோற்ப அங்கலெட்சணங்களோடு தத்துருபவமாக அமைக்கப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்  தம்பமண்டபத்தில் பலிபீடம் அமைந்துள்ளதோடுகொடிதம்பம் 27 அடி உயரம்கொண்டதாகவும்கொடிமரத்தைச் சுற்றிவெங்கலவார்ப்பு வேலைகள் உள்ளதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தின உள்வீதியில் பரிவாரக் கோயில்களாக நாகதம்பிரான்,மகாவிஸ்ணு,முருகன்,பைரவர்,நவக்கிரகங்கள்,ஆஞ்சநேயர்,ஆகியதெய்வங்களுக்கான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளதோடு சண்டேஸ்வரருக்கான ஆலயமும்,மற்றும் சிவலிங்கத்தைப் பிரதிஸ்டை செய்வதற்காக செவிதரிசன முறையில் வணங்கக் கூடியவாறு குறிஞ்சிக் கோட்டை அமைப்பை பின்பற்றி ஆலயமும் என பல சிறிய ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.இவை அனைத்தும்அழகிய சிற்பவேலைகளுடன் அமைந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது. மேலும் 41 அடிஉயரம் கொண்ட 2 மணிக் கோபுரங்களும் அமைக்கப்படுகின்றன.

தன்னகத்தே ஒருங்கே கொண்டு விளங்கும் இவ்வாலயத்தின் மிகமுக்கியமான சிறப்பம்சமும் எல்லோராலும் பேசப்பாடக் கூடியதும்வராற்றில்பொறிக்கப்படக் கூடியதும், 21ம் நூற்றாண்டின் இந்துக் கட்டிடக் கலை வளர்ச்சியில் புதியபரிமாணமுமாகவிளங்குவதுதான் இவ்வாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுகொண்டுடிருக்கும் விநாயர் பெருமானின் 64 அடிஉயர சுதை விக்கிர ராஜ கோபுரக்கட்டுமாகம் பணியாகும்.

 இந்து ஆகமமாகிய காமிய ஆகமத்தின் 21 வது பிரகார லக்ஷணவிதிப்படலத்தில் இராஜகோபுர அமைப்புமுறை கூறப்பட்டுள்ளதுஇதற்கமைய இராஜகோபுரம் என்பது கருவறையில் சூக்கும் லிங்கமாக விளங்கும் இறைவனைஆலயத்துக்கு வெளியே தொலைவில் நிற்கும் அடியார்களுக்குக் காட்சி தரும்வகையிலும்ஆலய மூலமூர்த்தியை நினைவுக்குக் கொண்டுவரும் வகையிலும்அமைக்கப்படும் அடையாள சின்னம் ஆகும்இதனால் இது ஸ்தூல லிங்கம் என அழைக்கப்படுகின்றதுஅதாவது கருவறையில் சிறிய வடிவில் விளங்கும்  இறைவனின் உருவத்தைப் பெரிதாக காட்சி தரக்கூடிய வகையில் அமைப்பதையே ராஜகோபுரசுட்டுகின்றது ஆலயத்துக்குச் செல்லும் அடியார்கள் தொலைவில் இக் கோபுரத்தைக்கண்டதும் மூலமூர்த்தியாக இதனை நினைத்து வழிபடவேண்டும் என்பது ஆலய தரிசனவிதியாகும்இந்து ஆலய அமைப்பானது ஒருமனிதனது உடமைப்பைப் போன்றது எனக்கூறப்படுகின்றது.அந்த வகையில் கருவறையானது தலையாகவும்அர்த்த மண்டபம் களுத்தாகவும் மகா மண்டபம் மார்பாகவும் நிருத்த மண்டபம் வயிறாகவும்,தம்பமண்டபம்,கால்களாகவும் கோபுரம் பாதமாகவும் கொடிமரம் முள்ளந்தண்டாகவும் அல்லது தொப்புளாகவும் உருவகிக்கப் படுகின்றதுஇங்கே கோபுரமானது பாதமெனக் கூறப்படுவதால் சமய அறிவு குறைந்த சிலர் கோபுரத்தை உயரமாகக் கட்டுவது பாதத்தை உயர்த்துவதுற்கு சமம் என்றும்கோபுர அமையப்படும் இடத்தில் பிரமாண்டமாக  தெய்வ உருவை சிற்பமாக அமைப்பது பிழை என்று வாதிடுகின்றனர்இது முற்றிலும் தவறானது கருத்தாகும்.

இந்துக் கட்டிடக்கலை வராலற்றில் இராஜகோபுரங்கள் காலத்துக்குக்காலம் பல பரிமாண வளர்ச்சியைக் கொண்டு விளங்குவதை அவதானிக்கலாம்.பல்லவர்கால மன்னர்கள் குடவரைக் கோயில்களையும்,கற்றளிக் கோயில்களையும் அமைக்க,சோழர்கள் பெரிய விமானங்களைக் கொண்டதாக ஆலயங்களைஅமைத்தனர்.பல்லவர்,சோழர்காலங்களை விட நாயக்கர் காலத்தில் மிகப்பிரமாண்டஇராஜ கோபுரங்கள் அமைக்கப்பட்டன.இவற்றில் மதுரை மீனாட்சி அம்மன்,ஸ்ரீரங்கம்போன்ற ஆலயங்கள் குறிப்பிடதக்கவை.ஆனால் தொடர்ந்து பிற்காத்தில் பிரமாண்டமானஆலயங்கள் அமைக்கப்பட்டதோடு இக்கோபுரங்களின் மூலமூர்த்தியின் பல்வேறுவடிவங்கள்,தேவஅசுர யுத்தம் போன்ற வீரதீரச் சிற்பங்கள் என தெய்வங்கள் ஏராளாமாக அமைக்கப்படுவதோடு கோபுரங்களின் உயரமும் அதிகரித்து (மட்டக்களப்பு போரதீவுகாளி அம்மன் 13 தளத்தில் அமைக்கப்படுகின்றதுஇந்து கட்டிட,சிற்ப கலையானது பெரு வளர்ச்சி கண்டுவருவதை அவதானிக்கலாம்.

அந்தவகையில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் விநாயப்பெருமானின் 64 அடி உயர சுதைவிக்கிரக ராஜகோபுரகட்டுமானப் பணியானது ஆகமமுறை தழுவியதாகவும் அதேவேளை இந்துக் கட்டக்கலையும் ஒருங்கே அமைந்த பெருவளர்ச்சியாக திகழ்கின்றதுஇது வரையில் எங்கும் இல்லாதவாறு அமைக்ப்படும் இவ்வாலயநிர்மானமானது இந்து கட்டிடக்கலை வளர்ச்சிகும் பெரிதும் உதவுவதோடு இந்துதர்மத்துக்கும் இக்கிராம மக்களுக்கும் கிடைத்த் பெருமை என்றால் அது மிகையாகது.

கட்டுரை -த.விமாலாந்தராஜா
படங்கள் எஸ்.ஸிந்தூ

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top