
(எஸ்.பி.நாதன்)
தேவ மாதாவின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு நகர எல்லை வீதியிலுள்ள வீடொன்றின் குடும்பத்தினருக்கு ஆசி வேண்டி இன்று செவ்வாய்க்கிழமை (14) மாலை பிரார்த்தனை இடம்பெற்றது.
மட்டக்களப்பில் மாதாவின் மாதத்தையொட்டி மாதாவின் சொரூபத்தை ஒரு வீட்டிற்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் ஆலயம் அமைந்துள்ள பங்கு மக்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆலய பங்குத் தந்தையால் மாதாவை கையிலேந்தி ஆசீர் வாதம் செய்யபட்டது.
தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலய பங்குத் தந்தை சி. அன்னதாஸ் தலைமையில் குடும்பத்தினருக்கு ஆசி வேண்டிய பிரார்த்தனையில் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மாதாவின் பிறத்த தினம் ஓக்டொபர் மாதம் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment