பாரதக்கதையில் வரும் பஞ்சபாண்டவர்களின் வரலாற்றைக்கூறும் பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தீமிப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10) நடைபெற்றது.
18 நாட்கள் கொண்ட இச்சடங்கின் நிகழ்வுகளை கண்டு கழிப்பதற்காக நாட்டின் நாலாப் பக்கங்களிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.
பஞ்சபாண்டவர்கள் மற்றும் தேவாதிகள் கடற்குளிப்பில் ஈடுபட்டு பின்பு தீமிப்பில் கலந்து கொண்டனர்.
காவடிகள் மற்றும் கற்பூரச் சட்டிகள் ஏந்தி அடியார்கள் தங்கள் நேர் கடன்களை நிறைவேற்றினர்.
கடந்த மாதம் 23 ம் திகதி ஆரம்பமான உற்சவத்தில் இறுதி 3 நாட்களில் கடந்த 8 ஆம் திகதி பஞ்சபாண்டவர்கள் திரௌபதை வனவாசம், 9 ஆம் திகதி அருச்சுனர் கோபுரத்தில் ஏறி தவநிலையில் இருந்தமை என்பன இடம்பெற்றன.
இன்று (11) தருமருக்கு முடி சூட்டலுடன் கூடிய பால்பள்ளயத்துடன் வருடாந்த உற்சவம் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment