0

(எஸ்.பி.நாதன்)

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு உளநோய்களோடு வெற்றிகரமாக வாழுதல் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று வெள்ளிக்கிழமை (10)  நாவற்காட்டில் இடம்பெற்றது.
அதிதிகள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கு பற்றிய ஊர்வலம் நாவற்காடு வைத்தியசாலையிலிருந்து ஊர் வீதிகளினூடாக பாடசாலையை சென்றடைந்தது.

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்) எஸ்..சிறீதரனின் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப்பகுதியில் இருக்கின்ற சமூகப் பொருளாதாரப் பிரச்சிகைள் பலவற்றை உதாரணம்காட்டி இவற்றை வெற்றிகொள்வதற்கு உளநல மேம்பாட்டின் அவசியம் பற்றி  வவுணதீவுப் பிரதேச, சுகாதார வைத்திய அதிகாரியான செல்வி.ரி.கலைச்செல்வி விளக்கமளிதார்.

பிளான் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் டேவிட் சதானந்தன், எஸ்கோ நிறுவன பணிப்பாளர் எஸ். ஸ்பிரித்தியோன், பேசிக்நீட் நிறுவனத்தின் இலங்கைக்கான நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் வாணி சுரேந்திரநாதன் மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர்களான சி.ஸ்ரீதரன்,அ.ஜெயகரன் ஆகியோர் பங்கேற்றனர்.








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top