0

(எஸ்.பி.நாதன்)

அகில இலங்கை பாடசாலைகளுக்கான தேசிய விளையாட்டு விழாவில் மல்யுத்தப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (10) மட்டக்களப்பில் நடைபெற்றது.

கல்லடி சிவானந்தா பாடசாலையின் மாணவர்களான 19 வயதுப் பிரிவில் என். நிசோத் மற்றும் 17 வயதுப் பிரிவில் என். பிரகாஷ் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

மகாராஜா கூட்டு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட பிளட்டினம் விருதை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் வழங்கி வைத்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவப் பணிப்பாளர் எம்.எல். எம். என். நைறூஸ், மாநகர ஆணையாளர் என். தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top