0
(எஸ்.பி.நாதன்)

சர்வதேச சிறுவர்> பெண்பிள்ளைகள் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விழா இன்று (11) டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் முதியோர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு கௌரவிப்பும் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலகத்தினால் தேன்சிட்டு மலர் வெளியிடப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா முதல்பிரதியை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ்சிக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார். 

மேலதிக  அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் மட்டக்களப்பு வயைக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் மற்றும் செரி நிறுவனப் பணிப்பாளர் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகததின் தவிசாளர் பொன் செல்வநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.











Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top