மட்/ வின்சென்ற் தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்குப் பிரதம அதிதிகளாக மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா மற்றும் மட்/ வலயக்கல்விப் பிரதிப் பணிப்பாளர் எஸ் சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடசாலைக்குப் பெருமை சேர்த்து பிரதீபா பிரபா விருதினைப் பெற்ற பாடசாலை அதிபர் அத்தோடு ஆசிரியர் திருமதி பாலேந்ரா ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்

Post a Comment