ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவங்கேணி வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த (5) ஞாயிறு மாலை மின்சார தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை கிழக்கில் வசித்து வந்த ஜோன் ரஞ்சன் (வயது 46) என்ற இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையே மின்சார தாக்குதலுக்குளாகி உயிரிழந்துள்ளார்.
மாலை 7.45 மணியளவில் மின்னல் இடித்து கொண்டிருக்கும் வேளையில் தனது வீட்டிற்குள் இருந்த மின்சார பொருட்களை அவர் பழுதுபார்த்துக் கொண்டிருக்கும்போதே மின்சார தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். மின்சாராம் தாக்கி உயிரிழந்தவர் மின்சாரா பொருட்கள் திருத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மின்சாரம் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மேலதிக பிரேத பிரிசோதனைக்காக செங்கலடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்வம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







Post a Comment