0
'மானுடம் சிறக்க உழைப்பது மகுடம் தானதுவாகி தழைப்பதும் மகுடம்'

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் ஒருமணிநேர தென்மோடி இசை நாடகம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வெ.தவராஜா அவர்களின் தலைமையில் 8.10.2014 அன்று நான்காவது பௌர்ணமி அமர்வு நிகழ்வாக மாலை 4.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாநகரசபையும், விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனமும்  அனுசரணை வழங்குவதுடன். வளந்துவரும் ஊடகமான இணையக்குரல் ஒலி மற்றும் செய்திச் சேவை ஊடகமான www.battifm.com ஊடக அனுசரணை வழங்குகின்றது.

இந்நிகழ்வுகள் மகுடம் கலைஇலக்கிய வட்டத்தலைவர் கவிஞர் வி. மைக்கல் கொலின் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து இடம்பெறும். பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் திரு.மா. உதயகுமார் அவர்களும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே. பிரேம்குமார் அவர்களும் கலந்துகொள்கின்றனர்.

பேராசிரியர் சி. மௌனகுரு மற்றும் உதவியாளராக ஸ்ரீமதி பிரியதர்ஷpனி ஜதீஸ்வரன் ஆகியோரால் மேடை விந்நியாசம், நெறியாள்கை வழங்கப்படுகின்றது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது www.battifm.com

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top