0


(எஸ்.பி.நாதன்)


கிழக்கின் எழுச்சி திட்டத்தின் கீழ் வணிக புகைப்படக் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஜி.ஐ.இசற் உடன் இணைந்து சிறிய நடுத்தர முதலீட்டாளர்களுக்கும், வங்கி வாடிக்கையாளர்களுக்கும், பொது மக்களிற்கும் மற்றும் தொழில் நுட்பவியல் கல்வி சார் மாணவர்களுக்கும் வழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வாடிக்கையாளர்களில் வியாபாரத்தில் அதிகூடிய அடைவு மட்டத்ததைப் பெற்ற வியாபாரிகளின் வியாபார செயல்முறைகள் புகைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கை- ஜேர்மனிய நட்புறவின் வெளிப்பாடாக 1952 ஆம் ஆண்டு ஜோமனியில் இருந்து 6 பஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. குறிப்பிட்ட காலத்தின் பின்பு 2 பஸவண்டிகள் இயங்க மறுத்ததால் திருத்துவதற்கு ஜேர்மனியில் இருந்து இரண்டு திருத்துனர்கள் வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இப்டி வரவழைக்க முடியாததனால் மொறட்டுவ ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற்சி நிறுவகம் ஆரம்பிக்கப்பட்டதாக ஜி.ஐ.இசற் அதிகாரி தெரிவித்தார்.

தற்போது இந்நிலையத்தின் கிளை கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட இயங்கும் நிலையில் உள்ள பஸ் வண்டியில் ஓன்றில் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையின் ஊழியர்களால் பாடசாலை விட்டு விலகிய மாணவர்களுக்கு தொழில் பெறும் சந்தர்ப்பங்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது பற்றி இச் சந்தர்பத்தின்போது விளக்கமளிக்கப்பட்டன.

நேற்று (11) ஆரம்பமான இக்கண்காட்சி இன்றுடன் (12) முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top