பாரம்பரிய கலை இலக்கிய சங்கமம் இறுதி நாள் நிகழ்வு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது.
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நாவற்குடா இந்து கலாசார நிலைய மாணவிகளின் கரகம், தேத்தாதீவு கிராமிய கலைக் கழகத்தின் வசந்தன் கூத்து, இணுவில் கந்தசாமி கோயில் இளம் தொண்டர் சபையிளரின் இசை நாடகம், பொகவந்தலாவ மலையக கூத்தியல் கலைஞர்களின் காமன் கூத்து மற்றும் கலைஞாகள் கௌரவம் இடம்பெற்றன.
கலைஞர்கள் கௌரவிப்பில் பேராசிரியர் மௌனகுரு, சாம்பசிவச் சிவாச்சாரியார், இந்து கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சண்முகநாதன் ஆகியோர் கலைக் குழுக்களின் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தார்கள்.
மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் எம். மோகன்ராஜ், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எஸ். மலர்ச் செல்வன், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் க. நிர்மலா ஆகியோர் பங்கேற்றனர்.

Post a Comment