0

(எஸ்.பி.நாதன்)

இலங்கையில் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் என அழைக்கப்படும் 1200 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழாவின் இறுதி நாளான அண்மையில் தீமிதிப்பு வைபவம் இடம்பெற்றது.
அம்மனுக்கு 1008 மடைகள் வைத்து மூலஸ்தான பூஜை நடைபெற்று அடியார்கள் கற்பூரச் சட்டி எடுத்தும் தீமிதிப்பில் ஈடுபட்டு தங்கள் கடமைகளை நிறைவேற்றினர்.

தீமிதிப்பின் பின்பு தெய்வாதீகளால் அடியார்களுக்கு அருள் வாக்கு சொல்லும் நிகழ்வு இடம்பெற்றது.

உற்சவக் கிரியைகள் ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்மம் வை. இ.எஸ். காந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்றன.

ஆலய வருடாந்த உற்சவம் கடந்த சனிக்கிழமை (27) ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top