0

(எஸ்.பி.நாதன்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்ற் மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்தில் நேற்று (11) நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம தலைமையில் இடம்பெற்றது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 2,122 திட்டங்களில் 856 திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.

இத்திட்டங்களுக்காக 1347.27 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில் 572.08 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மாவட்ட திட்டமிடல்  பணிப்பாளர் ஆர். நெடுஞ்சழியன் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், பொருளாதார அபிவிருத்தியமைச்சின் பணிப்பாளர் நாயகம் மொண்டி றணதுங்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன், சிப்லஜ பாறுக், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் கலந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.




Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top