www.battifm.com இன் ஊடக அனுசரணையில் மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய தென்மோடி இசை நாடகமான நொண்டி நாடகம் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வினை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வெ. தவராஜா தலைமேயேற்று நடாத்த பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா. உதயகுமார் , கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே. பிரேம்குமார் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வினை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வெ. தவராஜா தலைமேயேற்று நடாத்த பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா. உதயகுமார் , கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே. பிரேம்குமார் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.
இன்று 08.10.2014 புதன்கிழமை நான்காவது பௌர்ணமி அமர்வு நிகழ்வாக மாலை 4.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. மகுடம் கலை இலக்கிய வட்டத்தலைவர் கவிஞர் வி. மைக்கல் கொலினின் வரவேற்புரையை அடுத்து, பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து நொண்டி நாடகம் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம்.1950, 1960, 1970களில் நாடகங்கள் மேடையிடும் களமாக அமைந்திருந்தது. மீண்டும் அச்சூழலை உருவாக்க முயல்கிறார் துடிப்பு மிக்க மாநகரசபை ஆணையாளர் உதயகுமார். இவர்களின் உதவியினாலேயே இந்நாடகம் மேடையேறியது.
பேராசிரியர் சி. மௌனகுரு மற்றும் ஸ்ரீமதி பிரியதர்ஷpனி ஜதீஸ்வரன் ஆகியோரால் மேடை விந்நியாசம், நெறியாள்கை வழங்கப்பட்டது. இந் நாடகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பில் இன்று ஆடப்படுவதும் மன்னாரில் பண்டு ஆடப் பட்டதுமான நொண்டி நாடகம் ஒரு பழமை வாய்ந்த தென் மோடிக் கூத்தாகும். பரிகாசமும், கிண்டலும், அங்கதச்சுவையும், அறப்போதனைகளும் நிறைந்தது இக் கூத்து. அரசர் வரலாறு கூறும் கூத்துமரபில் அரசர் அல்லாதோர் பற்றிக் கூறும் முதல் நாடகமாக இதனைக் கொள்ளலாம்.
இது தென்மோடி கூத்தின் இசையினை அடிப்படையாக வைத்து நவீன மேடைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட புதிய ஆக்கமாகும். 1962 இல் பேராசிரியர் வித்தியானந்தன் பேராததனைப் பல்கலைக் கழக மாணவர்களைக் கொண்டு இந்நாடகத்தை செம்மை ஆக்கம் செய்து மேடை இட்டார். ஏறத்தாழ 52 வருடாங்களுக்குப் பின் இதனை புதிய வடிவத்துடன் ஒரு பரீட்சாத்தமாக உருவாக்கியுள்ளார் பேராசிரியர் மௌனகுரு.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் 1962 இல் இந் நாடகத்தை பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு மேடையிட்டார். ஏறத்தாள 52 வருடங்களின் பின் இதனை புதிய உத்திகளுடனும் புதிய பரிமாணத்துடனும் இதற்கு ஒரு மேடை வடிவம் கொடுத்துள்ளார் பேராசிரியர் மௌனகுரு.
தமிழில் ஒரு ஒபேறாவை (opera) கொணரவேண்டும் என்றபேரவாவின் ஆரம்ப முயற்சி இது என்கிறார் நெறியாளர் மௌனகுரு இதனை ஒரு இசை நாடகமாக உருவாக்குவதில் மௌனகுருவுக்கு உதவியாக ஸ்வாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக முன்னாள் இசைத்துறை தலைவி பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன். ஓய்வு நிலை இசைத்துறை விரிவுரையாளர் சரஸ்வதி சுப்ரமணியம் ஹார்மோனிய இசை விற்பன்னரான ஜூட். மத்தளம், தபேலா முதலிய தோல் கருவிகளை இசைக்கும் மோகனதாசன் ஆகிய இசைக்கலைஞர்கள் உதவியுள்ளனர்.



Post a Comment