0
சட்ட நடைமுறைகளையும், நீதிமன்ற செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளாத ஒரு கூட்டம், ஜெயாவுக்கு ஏன் உடனே ஜாமீன் கொடுக்கவில்லை என்றும், இந்த தண்டனையையே கர்நாடக அரசு கொடுத்தது என்றும் உளறிக்கொட்டிகொண்டு இருகிறார்கள்..

ஜாமீன் என்பது "குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு" தான் "உரிமையே" தவிர, குற்றவாளிகளுக்கு கிடையாது... சொத்துகுவிப்பு வழக்கில், ஜெயா இப்போது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட "குற்றவாளி". மேல் நீதிமன்றங்களில் இப்போது வந்துள்ள தீர்ப்பை ரத்து செய்யும்வரை, சிறப்பு நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பும், தண்டனையும் செல்லுபடியில் இருக்கும்.

குற்றவாளிக்கு ஜாமீன் என்பது உடனே கிடைக்காது... ஒருவேளை விசாரணை கைதியாக பல மாதங்களை ஏற்க்கனவே சிறையில் கழித்திருந்தால், ஜாமீன் கிடைக்க வாய்ப்புண்டு... ஆனால், இந்த வழக்கில், ஜெயா, சிறையில் நீண்ட நாட்கள் இருந்தது கிடையாது..

இதுபோன்ற வழக்குகளில், தீர்ப்பு அளிக்கப்பட்டு குறைந்தபட்சம் முப்பது நாட்களுக்கு மேலாய்தான், ஜாமீன் வழங்க மேல் கோர்ட்டுகள் முன்வரும்.. லாலு, சோரன் போன்றவர்கள் வழக்கில் பத்து மாதங்களுக்கு பின்னர் தான் உச்சநீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.  

அடுத்து, ஜெயா சொத்துகுவிப்பு வழக்கு, இந்திய சட்டத்தின் படி விசாரிக்கப்பட்ட ஒன்று, கர்நாடகா, தமிழ்நாடு என்று மாநிலத்துக்கு மாநிலம் தனி சட்டங்கள் கிடையாது. மேலும் எல்லா உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றம் தான் நியமிக்கிறது, அந்த நீதிபதிகளும், இந்தியாவில் உள்ள எந்த உயர்நீதிமன்ற கிளைக்கும் மாற்றம் செய்யப்படலாம். எனவே, கர்நாடக அரசு தான் இந்த வழக்கில் தீர்ப்பு கொடுத்தது என்று உளறவேண்டாம்...

தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருந்த ஜெயா சொத்துகுவிப்பு வழக்கை, முந்தய அதிமுக ஆட்சியில் (2001-06) நீர்த்துபோக செய்ய முயன்றபோது, திமுக தலையிட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டதால், வேறு மாநிலத்துக்கு, கர்நாடகாவுக்கு மாற்றி உத்தரவிட்டது சுப்ரீம்கோர்ட்..... எனவே சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவின்படியும், கர்நாடக உயர்நீதிமன்ற கண்காணிப்பிலும் இந்த வழக்கு நடைபெற்றுவந்தது... அரசு தரப்பு வக்கீலும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தான் ஊதியம் பெறுகிறார்.. எனவே, கர்நாடக அரசுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் கிடையாது....

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top