0
(மன்மதன்)

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு நாடு பூராகவும் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுவருவதுடன் , அதன் ஓர் அங்கமாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராமிய அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் அனுசரணையுடன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தினால் ஏற்]பாடு செய்யப்பட்ட  மாகாண மட்ட சிறுவர் தின நிகழ்வு இன்று (09) கல்லடி ஓசானிக் ஹோட்டல் மண்டபத்தில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன். செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலுமிருந்து வருகைதந்த பாலர் பாடசாலைகளிளிருந்து சுமார் 1500 இற்கு மேற்பட்ட சிறார்கள் கலந்துகொண்ட நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கலந்து சிறப்பித்தார்.

மழலைச் சிறார்களின் பாண்ட் வாத்திய இசை முழங்க அதிதிகள் அழைத்துவரப்பட்டு ஆரம்பமாகிய இந்நிகழ்வில் மூன்று மாவட்டங்களிலுமிருந்தும் வருகைதந்திருந்த சிறார்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்று இறுதியில் அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கான கற்றல் உபகரணங்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.


மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள். 























Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top