0

(எஸ்.பி.நாதன்)

யுத்தத்தால் அழிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கை வீடமைப்புப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனாலேயே கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.' என கல்குடாத் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக்  கட்சியின் அமைப்பாளர் டி.எம். சந்திரபால தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள – பொண்டுகள்சேனை கிராமத்தில் திங்கட்கிழமை (13)) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கிளை ஸ்தாபிக்கப்பட்ட நிகழ்விலேயே சந்திரபால உரையாற்றினார்.

அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனைக் கிராமமும் அதனை அண்டியுள்ள ஏனைய கிராமங்களும் கடந்த கால யுத்தத்தினால் வீணாக அழிக்கப்பட்டன. இப்பகுதிகளிலுள்ள மக்கள்  தினமும் துப்பாக்கிச் சத்தங்களோடு என்னேரமும் மரண பயத்தில் நிம்மதியற்று வாழ்ந்து வந்தவர்கள், ஆனால் இன்று அப்படி பயப்பீதி எதுவுமில்லை.
இந்நிலைமையை உருவாக்கி உங்கள் பிள்ளைகளை தொடர்ந்தும் யுத்தத்திற்குப் பலிகொடுக்காமல் பாதுகாத்துத் தந்தவர் கருணா அம்மான் எனப்படுகின்ற தற்போதைய அரசாங்கத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரனே.

கடந்த கால அநாவசிய யுத்தத்தின்போது இழந்தவைகளில் உயிரிழப்பை மட்டும் தவிர்த்து மக்கள் ஏனையவைகளை மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். பிள்ளைகளின் கல்வி, பொருளாதாரம், உயிர், உடமைகள், நிம்மதியான வாழ்வு எல்லாவற்றையுமே மக்கள் யுத்தத்தின்போது இழந்து விட்டார்கள். இந்த இழப்புக்களை நாம் படிப்படியாக ஈடு செய்ய வேண்டும்.

உயிரிழப்பக்களை மாத்திரம் திரும்பப் பெறப்பட முடியாது. அதேவேளை இனி இருக்கும் இளஞ் சந்ததியின் கல்வி பாழாய்ப்போவதற்கோ அவர்களுக்கு உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கோ நாம் ஒரு போதும் இடமளித்துவிடக் கூடாது. உணர்ச்சிக் கோஷங்களால் உங்களை உசுப்பேற்றிவிட வரும் பாரம்பரிய அரசியல்வாதிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். ஆனால் உணர்ச்சியூட்டும் இந்தப் பாரம்பரிய அரசியல் வாதிகளால் உங்களுக்கு எதனைத்தான் பெற்றுத்தர முடியும். தேர்தல் காலத்தில் மட்டும் உங்கள் காலடிக்குத் தேடி வந்து உணர்ச்சியூட்டும் அரசியல் வாதிகள் பின்னர் உங்கள் வாக்குகளை சூறையாடிக் கொண்டு மாயமாகி மறைந்து பின்னர் அடுத்த தேர்தலுக்கு வருகின்றார்கள்.

இப்பொழுது மட்டக்களப்பு மாவட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு தமிழ்ப் பிரதியமைச்சராக விநாயகமூர்த்தி முரளீதரனே உள்ளார். அவரைக் கூட நீங்கள் தெரிவு செய்யவில்லை. எனவே எதிர் காலத்தில் நன்கு சிந்தித்து நமக்கு சேவை செய்பவர்களையும், நம்மை ஏமாற்றி உணர்ச்சியூட்டி வாக்குகளை சூறையாடிச் செல்பவர்களையும் இனங்கண்டு வாக்களியுங்கள். அதன் மூலமே உங்கள் பிரதேசம் வளர்ச்சியடையும்.' என்றார்.

நமது பிள்ளைகளுக்கான இலவசக் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சமூக சேவைத் திட்டங்கள், நலன்புரி வசதிகள், வேலை வாய்ப்புக்கள் என்று எத்தனையோ விதமான அரச சேவைகளை நாம் அனுபவிக்கின்றோம்.
இப்பொழுது மட்டக்களப்பு மாவட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு தமிழ்ப் பிரதியமைச்சராக விநாயகமூர்த்தி முரளீதரனே உள்ளார். எனவே எதிர் காலத்தில் நன்கு சிந்தித்து நமக்கு சேவை செய்பவர்களையும், நம்மை ஏமாற்றி உணர்ச்சியூட்டி வாக்குகளை சூறையாடிச் செல்பவர்களையும் இனங்கண்டு வாக்களியுங்கள். அதன் மூலமே உங்கள் பிரதேசம் வளர்ச்சியடையும்.' என்றும் கூறினார். 







Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top