சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பார்வையற்றவர்களின் அடையாளச் சின்னமான வெள்ளைப்பிரம்பு விழிப்பணர்வு ஊர்வலம் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை (15) நடைபெற்றது.
மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் லயன்ஸ் பெண்கள் கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஊர்வலம் காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபம் வரை சென்றது.
கண்ணிழந்தவர்களும் கணனியில் நிபுணர்கள், சாதனைக்கு பார்வை தடையல்ல, வெண்பிரம்பு விழி இழந்தோருக்கான வழிகாட்டி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகனை ஊர்வலத்தில் ஏந்திச் சென்றனர்.
மண்டபத்தில் தரிசனம் மாணவர்களின் பேச்சு, பாட்டு, நடனம் என்பன இடம்பெற்றன.
மட்டக்களப்பு மேலதிக அரச அதிபர் எஸ். கிரிதரன், மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், லயன்ஸ் கழக தலைவர் எம். மகேந்திரராஜா, லயன்ஸ் பெண்கள் கழக தலைவர் ஜெயபிரபா சுரேஷ், தரிசன தலைவர் முருகு தயானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment