(பொன்முடி)
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த விவேகானந்தா வித்தியாலய மாணவர்களை கௌரவித்து ஏறாவூர் பொலிஸ் காரியலயத்தினால் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 11 திகதி சனிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்ற பொலிஸ் நடமாடும்சேவையின் போது நடைபெற்றது. மாணவர்களுக்கான பரிசில்களை ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (எ.எஸ்.பி) காமினி இகலவெல வழங்கிவைத்தார்.
2014ம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர். கடந்த வருடத்தில் மாணவர்கள் சித்தியடையாத நிலையில் இவ்வருடம் ரவிச்சந்திரன் விவேக்கா (163) புள்ளிகளையும், சிலோஸ் தனுஸ்கன் (159) புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர். அத்துடன் 100 புள்ளிகளுக்கு மேல் 17 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பரிசில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர் கு.சண்முகம் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

Post a Comment