0


(எஸ்.பி.நாதன்)


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் வீடொன்றின் கூரையை உடைத்து 34 இலட்சம்  ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி ஏ. வெதகெதர தெரிவித்தார்.

நாவற்குடா அம்பாள் வீதியைச்சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொலநறுவை நிறைவேற்று பொறியியலாளரான வி.சுரேஸ்குமார் என்பவரின் இல்லத்திலேயே இக்கொள்ளைச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

46 பவுண் நகைகள் 1 லெப்டப் 2 நொக்கியா கையக்க தொலை பேசிகள் உட்ப்ட பல பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்று மாலை 6.45 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டைப்பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச்சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டுக்கூரை உiடைக்கப்பட்டு கொள்ளை இடமபெற்றிருந்தாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top