0
(எஸ்.பி.நாதன்)

வண்ணத்துப்பூச்சு சமாதான பூங்காவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை (18)காலை மட்டக்களப்பு பயினியர் வீதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

“எனக்கும் உலகில் உயிர்வாழ ஆசை,எங்கள்
உயிரைக்காப்பாற்றுங்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த இரத்தான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியினர் இரத்த மாதிரிகளை சேகரித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் வகையில் வண்ணத்துப்பூச்சு சமாதான பூங்காவினால் இந்த இரத்தானமுகாம் நடத்தப்பட்டுவருகின்றது.

இன்று காலை முதல் நண்பகல் வரையில் சுமார் 50 பேர் இரத்தங்களை வழங்கியுள்ளதுடன் இந்த இரத்ததான முகாமில் பொதுமக்கள்,பொலிஸார்,வண்ணத்துப்பூச்சு சமாதான பூங்காவின் உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

தலசீமியா நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவும் வகையில் இந்த இரத்தான முகாம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top