0
சர்வதேச சிறுவர் தினத்தினை சிறப்பிக்குமுகமாக மட்டக்களப்பு லிட்டில் பட்ஸ் பாலர் பாடசாலை நடாத்தும் சிறப்பு கண்காட்சியானது நேற்றைய தினம் (07) ஆம் திகதி பாலர் பாடசாலையின் இயக்குனர் சி.முகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஆரம்பமானது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.தவராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதல் நாள் அங்குரார்ப்பன நிகழ்வினை  காலை 08.30 மணிக்கு ஆரம்பித்துவைத்தார்.

இன்றைய தினம் இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 09.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணிவரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இக்கண்காட்சியில் மாணவர்களினால் வடிவமைக்கப்பட்ட ஆக்கப்பொருட்கள், ஓவியங்கள், ஆசிரியர்களினால் வடிவமைக்கப்பட்ட ஆக்கப்பொருட்கள், கற்றல் / கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஆக்கங்கள் என்பன காட்சிப்படுத்தப்படயுள்ளன.










Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top