0

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடைக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 


இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டால் ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்ட மந்திரி ஜெயச்சந்திரா நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்றக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த வக்கீல் சத்தியநாராயணா என்பவர் ஒரு புதிய மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எச்.வகேலா முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது மனுவை சத்தியநாராயணா வாபஸ் பெற்றார். 



ஜெயலலிதா சார்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் தனது மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top