0
இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அதிமேதகு ஜனாதிபதி மைதிதிரிபால சிறிசேன தமிழ் பேசும் உயர் நீதியரசர்  ஸ்ரீ பவன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாக இன்று (09) வெள்ளிக்கிழமை மாலை 6.21 மணிக்கு தமது பொறுப்புக்களை ஏற்கும் வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கினறது.

முதலில் மதகுருமாரின் ஆசியினை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் மத்தியில் தமது பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது நாட்டின் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் நாட்டின் ஜனாதிபதி தனது கன்னி உரையினை நாட்டு மக்களுக்காக தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top